ஶ்ரீ: ஶ்ரீமதே ராமாநுஜாய நம:
மாலை கட்டிய மாலை
ஆழ்வார் திருமகளார் ஆண்டாள், பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் அவதரித்து, அஞ்சுகுடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் வளரப்பெற்றாள். வட பெரும் கோயிலுடையானோடே தழுவி முழுசி பரிமாறவும் பாரித்தாள். அர்ச்சா சமாதியில் இருந்த அவன் முகம் காட்டாதே ஒழிய, இன்னாப்படைந்தவளாய், அவனோடு கலந்து பரிமாறின திருவாய்ப்பாடிப் பெண்கள் விருத்தாந்தம் கேட்டு தானும் அநுகரித்து தரிக்கப் பெற்றாள் என்கிறதான அவளுடைய சரித்திரத்தை பலரும் அறிவர் . மடலெடுக்காதே, அவள் நோன்பிலே கை வைத்தது கிருஷ்ணனுடைய உபாயாந்தர அஸஹிஷ்ணுத்வத்தை கருத்திலே கொண்டு என்பர்.
பெரியாழ்வார் பகவத் ஸம்ருத்தியை ஆசைப்பட்டிருந்தார். ஆண்டாளோ பாகவத ஸம்ருத்தியை ஆசைபட்டாள். ஆண்டாள் பாடிய திருப்பாவை இதுக்கு ப்ரதீகம். பெரியாழ்வார் பிரதம பர்வத்திலே நிற்க, இவளோ சரம பர்வத்திலே ஊன்றினளாய்- சத்ருக்நாழ்வான் படியிலே நிற்கப்பெற்றாள். ”விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேலது காண்டும்”என்கிற நாச்சியார் திருமொழி பாசுரம் (௧0-௧0) இதுக்கு விஷயம்.
அந்த வகையிலே அவள் பாடிய பாசுரங்கள் ஒவ்வொன்றுமே ஒரு புஷ்ப குஞ்ஜா (ஹாரம்) என்று சொல்லலாம். பாசுரங்களின் ஈற்றடியிலே வருகிற சொற்றொடர் களைக் கொண்டே அந்தந்த மாலைக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது இங்கு. இதற்கு முன்னால் இப்படி மாலை மலையால் கட்டியவர்கள் உண்டோ என்னில், ஆம் ! உண்டு என்றே சொல்லலாம் .
பாரோர் புகழ் மாலை :
அதாவது முதல் பாட்டின் ஈற்றடியில் ’பாரோர் புகழ படிந்து ஏலோரெம் பாவாய்’ என்று வருவதால் இந்த பாசுரம் ’பாரோர் புகழ் மாலை’ ஆகிறது. அநந்யப் பிரயோஜன பரர்க்கு, புகழ்சி புருஷார்த்தமாகக் கூடுமா? கியாதி, லாப, பூஜையில் கண்வைத்து பாசுரம் பாடலாமா? என்னில் ஸ்வவிஷயத்தில் அல்லாமல் பரார்த்தமான கியாதி உத்தேஸ்யமே.
மகிழ்சி ஒருவர் புகழ்தல் காரணமாக வருமது. ஆக காரணத்தைச் சொல்ல வேண்டிய இடத்தில் கார்யத்தைச் சொன்னதாகப் பார்க்கில், ’பாரோர் மகிழ படிந்து ஏலோரெம்பாவாய்’ என்று கொள்ள இடமுண்டு. ஸ்வயம் பிரயோஜனமாகாதே பாரோர் மகிழ்வதைத்தான் ஆண்டாள் இங்கே பேசுகிறாள். ’படிந்து’ என்பதில் உள்ள ஸ்வாரஸ்யம் ’விதேயனாய்’ இருந்து நாரயணன் நமக்கு கிருபை செய்வான் என்பதை விசேஷித்து நோக்கத்தக்கது. ’நாராயணனே நமக்கே பாரோர் புகழ படிந்து பறை தருவான்’ என்று அன்வயித்துக் கொள்ள வேண்டும்.
கிருபை செய்யுமிடத்து எம்பெருமான் ஆஸ்ருத பரதந்திரனாய் இருந்து கார்யம் செய்யும் என்பதை ஆழ்வார் ’அருள்பெறுவார் அடியார்தம் அடியனேற்கு ஆழியான் அருள் தருவான் அமைகின்றான், அது நமது விதிவகையே’ (திருவா. ௧0-௬-௧) என்று முன்மொழிந்ததை, வழிமொழிகிறாள் ஆண்டாள். அதாவது, பிராப்ய-பிராபக விவேக ஞானம் உடைய பிரபன்னாதிகரிகள் விஷயத்தில் எம்பெருமான் இப்படி கார்யம் செய்யும் என்பதிலே நோக்கு.
இப்படி பர ஸமிர்த்தியால் இவர்களுக்கு வந்த புகழ் என்பதால் இது ஏற்புடைத்து அல்லவே?
இரண்டாம் பாட்டு -’உய்வு மாலை’ :
இப்பாட்டின் ஈற்றடி ’உய்யுமாறெண்ணி உகந்து’ என்பது. நோன்பில் ஒருப்பட்ட ஆண்டாள் தத்விஷயமாய் விடவேண்டியவை இன்னது, அநுஷ்ட்டிக்க வேண்டியவை இன்னது என்கிற கிருத்யாகிருத்ய விவேகம் பண்ணி யருளுகிறாள்.
அந்த வகையில் ஆண்டாள் சாதித்த ஆறு நியமங்களும்,
காஞ்சி தேவப்பெருமள் ஆறு வார்தைகளும்,
ஆழ்வார்கள் ஆறு வார்த்தைகளும் போல
நமக்கு உஜ்ஜீவன ஹேது என்றால் மிகையாகாது.
தேவப்பெருமாள் ஆறு வார்த்தைகளாவன :
௧. அஹமேவ பரம் தத்வம்;
௨. தர்சனம் பேதயேவச;
௩. உபாயேஷு பிரபத்திஸ்யாத்;
௪. அந்திம ஸ்மிருதி வர்ஜனம்;
௫. தேஹாவஸாநே மோக்ஷம்ச
௬. பூர்ணாசார்யம் (பெரிய நம்பி) ஸ்மாஸ்ரயேத் - என எம்பெருமானாரோடு மிக்குள்ள நம்மையும் விஷயீகரிக்க திருக்கச்சி நம்பிகள் மூலம் அருளிச் செய்த வார்த்தைகளாகும்.
ஆழ்வாரகள் ஆறு வார்த்தைகளாவன :
௧. வதுவை வார்த்தை(திருவா.௫-௧0-௨);
௨. நெய்யூண் வார்த்தை(திருவா.௫-௧0-௩);
௩. வெண்ணை வார்த்தை(திருவா.௬-௨-௧௧);
௪. நடந்த நல்வார்த்தை(-"-௭-0௫-௯);
௫. மெய்மைப் பெருவார்த்தை (நாச்.௧௧-௧0);
௬. விடுத்ததோர் வார்த்தை (பெரி.௨-௮-௬).
வதுவை வார்த்தையாவது - எருதுகள் ஏழையும் நிரசித்தார்க்கு நப்பின்னையை மணமுடிப்போம் என்கிற வார்த்தை. அது பிறந்தவளவிலே ஏறுகள் ஏழின்மேல் விழுந்து கண்ணன் கொன்ற விருத்தாந்தமும் ,
நெய்யூண் வார்த்தையாவது - நெய்களவு கண்டான் என்னும் வார்த்தை பிரஸ்துதமாக, தாய் யசோதை கையில் கோல்கொள்ளவும் தன் தாமரைப்பூ போன்ற கண்களில் அச்சத்தோடே நீர்மல்க நின்ற கண்ணனின் எளிவரவும் ,
வெண்ணை வார்த்தையாவது - வெண்ணை களவு போயிற்று என்கிற வார்த்தையிலே ’கண்ணனே களவு செய்தான்’ என தாயார் வைக்கோல் கொண்டு புடைத்தாளாக, கண்ணும் கண்ணீருமாய் நிற்கிற அவன் நிலை எதைப்போன்றது என்றால் - ஒரு சத்திரத்தில் வழிப்போக்காக தங்க வந்த யாத்ரிகர்களிலே ஒருவர், மடம் இவ்வளவு பெரியதாக உள்ளதே, இதனை மெழுகி கோலமிடுவார் யாரே? (அதி சிரமமான காரியமாகவிருக்கும் என்கிற அர்த்தத்தில்) வினவ, யாரோ ஒரு அஸ்ரோத்ரியன் என்று இன்னொருவர் பதில் இறுத்தார். ’இவ்வளவு பெரிய மடத்தை தன்னாலே மெழுகப்போகாது’ என்றானாம் அவர்களிலே ஒருத்தன். இப்படி அவன் தன்னை அஸ்ரோத்திரியன் என்று வெளிப்படுத்தினாப் போலே, வெண்ணை களவு போயிற்று என்கிற வார்த்தையிலே தன்னைத்தான் சொல்கிறார்கள் என்று கண்ணன் அழத் தொடங்கினது, என்னே அவன் மௌடியம்.
நடந்த நல்வார்த்தையாவது - கண்ணனெம்பெருமான் தன்மேன்மையை அழித்துக் கொண்டு தாழவிட்ட நீர்மை குணத்தை உணரலாகா தண்ணிய பூமியினின்றும் விடைப்பெற்று தன்னுடைச் சோதிக்கு எழுந்தருளிய போது திரௌபதி விஷயமாய் ’தன்னைக் கடன்பட்டவனாக’ அதிருப்தியோடே மொழிந்த சீரிய வார்த்தைகள்.
மெய்மைப் பெருவார்த்தையாவது - மாயன் அன்றைவர் தெய்வத் தேரினிற் செப்பிய கீதா-சரம ஸ்லோகத்தின் செழும்பொருளை விட்டுசித்தர் கேட்டு அதன்படி இருப்பர் என்கிற ஆண்டாள் நாச்சியாரின் பெருமிதமான வார்த்தை.
விடுத்ததோர் வார்த்தையாவது - கஞ்சன் வஞ்சிப்பதற்கு விடுத்த வார்த்தைகளாகும். அஸரீரி வாக்கியம் கேட்டவன்று தொடங்கி, தீயபுத்தி கஞ்சன் இருள்தான் ஒருவடிவு கொண்டாப்போலே கறுத்த நிறத்தையும், அக்நிஜ்வாலை போலே சிவந்த தலைமயிரையும் உடையளான பேய்சியை, நேர்கொடு நேர்சென்றால் சாதிக்கலாகாது, வஞ்சத்தால் சாதிப்பாய் என்று ஏவிவிட்ட வார்த்தை, கண்ணன் பிறந்தபோதே உண்டு என்ற இப்பெரியாழ்வார் வார்த்தையும் நமக்கு ஸ்மாரகம்.
எம்பெருமானார் ஆறு வார்த்தை :
பிரஸ்தான திரியங்களை வாசித்து வாசிப்பிப்பது , மாட்டிற்றாகில்
ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்து வாசிப்பிப்பது , மாட்டிற்றாகில்
அருளிச்செயல்களை வாசித்து வாசிப்பிப்பது , மாட்டிற்றாகில்
ரஹஸ்ய திரியங்களை வாசித்து வாசிப்பிப்பது , மாட்டிற்றாகில்
இவை அறிந்த ஸ்ரீவைஷ்ணவனோடே சகவாசம் பண்ணுகை, மாட்டிற்றாகில்
திருநாராயண புரத்திலே ஒரு குடில் கட்டி நித்யவாஸம் செய்வது.
”அநந்யசாத்யா சாபீஷ்டா... ” என்ற பிரமாண வசனத்தின்படி சரணாகதிக்கு நம்பக்கல் இருக்க வேண்டிய ஆறும் உத்கிருஷ்ட உஜ்ஜீவனோபாயம் என்பதில் விசம்வாதம் உண்டோ? இல்லை.
௧. பரமனடி பாடுகை,
௨. (நோன்புக் கனுகுணமாக) நெய், பால் உண்ணாமை, மை தீட்டல், மலர் சூடுகை இவை தாமாக செய்து கொள்ளாமை,
௩. (மேலையார்) செயாதவைகளை தவிர்கை,
௪. தீகுறளை (பகவத், ஆசார்ய சன்னிதியில்) விண்ணப்பிக்காமை,
௫. ஐயம் (சாஸ்திர விஹித) தானங்களையும்,
௬. பிச்சை (ஆஸ்ரம விஹித) தானங்களையும்,
ஆம்தனையும் அநுஷ்டித்துப் போருகை, ஆண்டாள் நமக்கிட்ட கட்டளை களாகும்.
’அது, இது, வுது என்னலாது, ”உன்செய்கை” என்னை நைவிக்கும்’ என்கிறபடியே பகவானால், பகவானுக்காக, பவானை குறித்து சொல்லப்பட்ட இவை அனத்துமே நமக்கு உஜ்ஜீவன ஹேது.
கி. ஸ்ரீர.ஸ்ரீ.

இலங்கைக்குத் தூது சென்ற திருவடி பிராட்டியைக் கண்டு சக்ரவர்த்தித் திருமகன் கூறியதாக சில அடையளங்களை பெரியாழ்வார் ''நெறிந்த கருங்குழல் மடவாய்...'' (3-10-1) என்கிற பதிகத்திலே 'எல்லியம் போதினி திருத்தல் இருந்ததோர் இடவகையில் மல்லிகை மாமாலை கொண்டு அங்கார்த்தும் ஓரடையாள ம் ' என்று பாசுரம் இட்டருளினார். அதன்படி சீதாபிராட்டி ராமனை மல்லிகை மாலையால் விளையாட்டாக கட்டியது ராமாயண பிரசித்தம். பெரியழ்வாரோ நந்தவனம் அமைத்து மாலை கட்டி சமர்ப்பித்த தோடு ஆண்டாளை ரங்கமன்னாருக்கு மணாட்டியாய்க் கட்டிக் கொடுத்து மாமனாராகவும் ஆனார். ஆக, 'மாலை மாலையால் கட்டிய மாலை' என்றே ஆண்டாள் பற்றி ஒரு வழக்கு உண்டு. அதாவது - திருமாலை பாமாலை கொண்டு கட்டிய கோதையாகிற மாலை - என்பதே அதன் பொருள்.
பாரோர் புகழ் மாலை :
அதாவது முதல் பாட்டின் ஈற்றடியில் ’பாரோர் புகழ படிந்து ஏலோரெம் பாவாய்’ என்று வருவதால் இந்த பாசுரம் ’பாரோர் புகழ் மாலை’ ஆகிறது. அநந்யப் பிரயோஜன பரர்க்கு, புகழ்சி புருஷார்த்தமாகக் கூடுமா? கியாதி, லாப, பூஜையில் கண்வைத்து பாசுரம் பாடலாமா? என்னில் ஸ்வவிஷயத்தில் அல்லாமல் பரார்த்தமான கியாதி உத்தேஸ்யமே.
மகிழ்சி ஒருவர் புகழ்தல் காரணமாக வருமது. ஆக காரணத்தைச் சொல்ல வேண்டிய இடத்தில் கார்யத்தைச் சொன்னதாகப் பார்க்கில், ’பாரோர் மகிழ படிந்து ஏலோரெம்பாவாய்’ என்று கொள்ள இடமுண்டு. ஸ்வயம் பிரயோஜனமாகாதே பாரோர் மகிழ்வதைத்தான் ஆண்டாள் இங்கே பேசுகிறாள். ’படிந்து’ என்பதில் உள்ள ஸ்வாரஸ்யம் ’விதேயனாய்’ இருந்து நாரயணன் நமக்கு கிருபை செய்வான் என்பதை விசேஷித்து நோக்கத்தக்கது. ’நாராயணனே நமக்கே பாரோர் புகழ படிந்து பறை தருவான்’ என்று அன்வயித்துக் கொள்ள வேண்டும்.
கிருபை செய்யுமிடத்து எம்பெருமான் ஆஸ்ருத பரதந்திரனாய் இருந்து கார்யம் செய்யும் என்பதை ஆழ்வார் ’அருள்பெறுவார் அடியார்தம் அடியனேற்கு ஆழியான் அருள் தருவான் அமைகின்றான், அது நமது விதிவகையே’ (திருவா. ௧0-௬-௧) என்று முன்மொழிந்ததை, வழிமொழிகிறாள் ஆண்டாள். அதாவது, பிராப்ய-பிராபக விவேக ஞானம் உடைய பிரபன்னாதிகரிகள் விஷயத்தில் எம்பெருமான் இப்படி கார்யம் செய்யும் என்பதிலே நோக்கு.
இப்படி பர ஸமிர்த்தியால் இவர்களுக்கு வந்த புகழ் என்பதால் இது ஏற்புடைத்து அல்லவே?
திருப்பாவை முதல் பாசுரம் - ஆண்டாள் பஞ்ச நாராயண பிரதிஷ்டை :
ஸ்வாமி எம்பெருமானார் , கிருமிகண்ட சோழன் உபத்தரவம் பொறுக்க மாட்டாமல் மேல்நாட்டில் எழுந்தருளி இருந்த காலத்தில் பிட்டிதேவன் என்கிற விஷ்ணுவர்த்தனான ஹொய்சள மன்னரின் உதவியோடு
தலக்காடு கீர்த்தி நாராயணன்
தொண்டனூர் நம்பி நாராயணன்
மேலகோட்டை திரு நாராயணன்
பேலூர் கேசவ நாராயணன்
கடக் வீர நாராயணன்
என்பதான பஞ்ச நாராயண க்ஷேத்ரங்களை பிரதிஷ்டாபித்தார் என்பது வரலாறு. கோயில் அண்ணரான இராமானுஜர் எவ்வழி அவ்வழி தங்கையான ஆண்டாளும் இந்த பாசுரத்தில்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் நாராயணன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம் நாராயணன்
கார்மேனி நாராயணன்
செங்கண் நாராயணன்
கதிர் மதியம் போல் முகத்த நாராயணன்
ஆகிய பஞ்ச நாராயணர்களை பிரதிஷ்டாபனம் பண்ணுகிறாள் என்பதை யுக்தி ரசத்தோடு பார்க்கலாம்.
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் -> திருமந்திரார்த்த பிரதனான ஆச்சாரியனைச் சொல்லும். எப்படி என்றால் தனக்கு விதேயனாக இருக்கிற கண்ணனெம்பெருமானை ரக்ஷிக்க வேண்டி , கூரிய வேலை பிடித்தவன் நந்தகோபன். ஆச்சாரியனும், பகவத் ரக்ஷண தத்பரர் ஆகையால், பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையர். இவருடைய மங்களாஸாசன தத்பரத்தையே இவர்கைவேல். திருமந்திரம் இவருக்கு விதேயமாய் சிஷ்யனுடைய ஆத்ம ரக்ஷணத்தில் காரியம் செய்கையாலும், நந்தித்தவமும் கோப்திருத்வமும் இவருக்கும் உண்டு ஆகையால் நந்தகோபன் குமரன் நாராயணன் என்றபடி.
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம் நாராயணன் -> என்பது கண்ணியாக உள்ள துவய மந்திர பிரதிபாத்யன் நாராயணன் என்றபடி. கண்ணனுடைய பிரதாபங்கள் எல்லாம் யசோதை இடத்திலாய், அவள் கண்வட்டத்துள் நின்று அகலாது முந்தாணையில் முடியாலாம்பட்டி இருக்கிற தன்மைகொண்டு - ஆசாரியன் கைபுகுந்தவாறே திருமந்திரம் கை புகுரும் என்ற கணக்கிலே மந்திரத்துக்கு உள்ளீடான வஸ்துவான நாராயணனைச் சொல்லுகிறது இத்தால்.
கார்மேனி நாராயணன் என்றது மேகத்தைப்போல் இன்னார் இனையார் என்று பார்க்காது , அவர்கள் இருக்கிற இடம் சென்று வர்ஷிக்கிற வர்ஷாகால மேகத்தைப்போலேயான ஒளதார்யமும், சௌலப்யமும் சொல்லிற்று. நீர் அந்த்ரேண சம்ஸ்லேய : என்று மழைநீர் அது விழுகிற இடத்தின் தன்மையை - செம்மண் பூமியானால் செந்நிறமும், பால்நிற பூமியானால் பால் நிறமும் பெறுவதுபோல - ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது உம்பி எம்பி என்று தோழமை கொண்டதும், மாடு கன்றுகளோடும், இடையர்களோடும் பொறையற கலக்கின்ற சௌசீல்யகுணத்தையும் சொல்லிற்று எனலாம்.
செங்கண் நாராயணன் -> என்றது செவ்வரியோடிய நீண்டவப் பெரியவாய கண்கள் என்று ஸ்வாமிதவ, ஸ்ரீமத்வ சூசகங்கள். மையக்கண்ணாள் என்று பிராட்டியையும், செய்யக்கோல தடங்கண்ணன் என்று ஷிரயப்பதித்தவமும், ஸ்ரீமத்வமும் இறே இவனுக்கு நிரூபணங்கள். இந்த ஸ்வாமித்வ, சௌலப்ய, சௌசீல்யாதிகள் அல்லவோ ஆஸ்ருத ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதக குணங்கள்?
கதிர்மதியம்போல் முகத்த நாராயணன் -> என்றது தண்ணளியும், பிரகாசமும் ஒருங்கேயான ஸ்வாமிதவ, சக்தி சாமர்த்தியாதி களுக்கு உப லக்ஷணம். இவை ஆஸ்ருத காரிய ஆபாதக குணங்களாய் நாராயண ஸப்தார்த்த குண போக்யதைகளையும் சொல்லிற்று.
அப்படிப்பட்ட நாராயணனே
மந்திரத்திலும், மந்திரத்துக்கு உள்ளீடான வஸ்துவிலும், மந்திர பிரதனான ஆசாரியன் பாக்கலிலும் பிரேமம் கனக்க உண்டான நமக்கே
ஸ்வரூபனுரூபமான கைங்கர்யமாகிற பறை தருவான் என்கிறது இப்பாசுரத்தில்.
இப்பாட்டின் ஈற்றடி ’உய்யுமாறெண்ணி உகந்து’ என்பது. நோன்பில் ஒருப்பட்ட ஆண்டாள் தத்விஷயமாய் விடவேண்டியவை இன்னது, அநுஷ்ட்டிக்க வேண்டியவை இன்னது என்கிற கிருத்யாகிருத்ய விவேகம் பண்ணி யருளுகிறாள்.
அந்த வகையில் ஆண்டாள் சாதித்த ஆறு நியமங்களும்,
காஞ்சி தேவப்பெருமள் ஆறு வார்தைகளும்,
ஆழ்வார்கள் ஆறு வார்த்தைகளும் போல
நமக்கு உஜ்ஜீவன ஹேது என்றால் மிகையாகாது.
தேவப்பெருமாள் ஆறு வார்த்தைகளாவன :
௧. அஹமேவ பரம் தத்வம்;
௨. தர்சனம் பேதயேவச;
௩. உபாயேஷு பிரபத்திஸ்யாத்;
௪. அந்திம ஸ்மிருதி வர்ஜனம்;
௫. தேஹாவஸாநே மோக்ஷம்ச
௬. பூர்ணாசார்யம் (பெரிய நம்பி) ஸ்மாஸ்ரயேத் - என எம்பெருமானாரோடு மிக்குள்ள நம்மையும் விஷயீகரிக்க திருக்கச்சி நம்பிகள் மூலம் அருளிச் செய்த வார்த்தைகளாகும்.
ஆழ்வாரகள் ஆறு வார்த்தைகளாவன :
௧. வதுவை வார்த்தை(திருவா.௫-௧0-௨);
௨. நெய்யூண் வார்த்தை(திருவா.௫-௧0-௩);
௩. வெண்ணை வார்த்தை(திருவா.௬-௨-௧௧);
௪. நடந்த நல்வார்த்தை(-"-௭-0௫-௯);
௫. மெய்மைப் பெருவார்த்தை (நாச்.௧௧-௧0);
௬. விடுத்ததோர் வார்த்தை (பெரி.௨-௮-௬).
வதுவை வார்த்தையாவது - எருதுகள் ஏழையும் நிரசித்தார்க்கு நப்பின்னையை மணமுடிப்போம் என்கிற வார்த்தை. அது பிறந்தவளவிலே ஏறுகள் ஏழின்மேல் விழுந்து கண்ணன் கொன்ற விருத்தாந்தமும் ,
நெய்யூண் வார்த்தையாவது - நெய்களவு கண்டான் என்னும் வார்த்தை பிரஸ்துதமாக, தாய் யசோதை கையில் கோல்கொள்ளவும் தன் தாமரைப்பூ போன்ற கண்களில் அச்சத்தோடே நீர்மல்க நின்ற கண்ணனின் எளிவரவும் ,
வெண்ணை வார்த்தையாவது - வெண்ணை களவு போயிற்று என்கிற வார்த்தையிலே ’கண்ணனே களவு செய்தான்’ என தாயார் வைக்கோல் கொண்டு புடைத்தாளாக, கண்ணும் கண்ணீருமாய் நிற்கிற அவன் நிலை எதைப்போன்றது என்றால் - ஒரு சத்திரத்தில் வழிப்போக்காக தங்க வந்த யாத்ரிகர்களிலே ஒருவர், மடம் இவ்வளவு பெரியதாக உள்ளதே, இதனை மெழுகி கோலமிடுவார் யாரே? (அதி சிரமமான காரியமாகவிருக்கும் என்கிற அர்த்தத்தில்) வினவ, யாரோ ஒரு அஸ்ரோத்ரியன் என்று இன்னொருவர் பதில் இறுத்தார். ’இவ்வளவு பெரிய மடத்தை தன்னாலே மெழுகப்போகாது’ என்றானாம் அவர்களிலே ஒருத்தன். இப்படி அவன் தன்னை அஸ்ரோத்திரியன் என்று வெளிப்படுத்தினாப் போலே, வெண்ணை களவு போயிற்று என்கிற வார்த்தையிலே தன்னைத்தான் சொல்கிறார்கள் என்று கண்ணன் அழத் தொடங்கினது, என்னே அவன் மௌடியம்.
நடந்த நல்வார்த்தையாவது - கண்ணனெம்பெருமான் தன்மேன்மையை அழித்துக் கொண்டு தாழவிட்ட நீர்மை குணத்தை உணரலாகா தண்ணிய பூமியினின்றும் விடைப்பெற்று தன்னுடைச் சோதிக்கு எழுந்தருளிய போது திரௌபதி விஷயமாய் ’தன்னைக் கடன்பட்டவனாக’ அதிருப்தியோடே மொழிந்த சீரிய வார்த்தைகள்.
மெய்மைப் பெருவார்த்தையாவது - மாயன் அன்றைவர் தெய்வத் தேரினிற் செப்பிய கீதா-சரம ஸ்லோகத்தின் செழும்பொருளை விட்டுசித்தர் கேட்டு அதன்படி இருப்பர் என்கிற ஆண்டாள் நாச்சியாரின் பெருமிதமான வார்த்தை.
விடுத்ததோர் வார்த்தையாவது - கஞ்சன் வஞ்சிப்பதற்கு விடுத்த வார்த்தைகளாகும். அஸரீரி வாக்கியம் கேட்டவன்று தொடங்கி, தீயபுத்தி கஞ்சன் இருள்தான் ஒருவடிவு கொண்டாப்போலே கறுத்த நிறத்தையும், அக்நிஜ்வாலை போலே சிவந்த தலைமயிரையும் உடையளான பேய்சியை, நேர்கொடு நேர்சென்றால் சாதிக்கலாகாது, வஞ்சத்தால் சாதிப்பாய் என்று ஏவிவிட்ட வார்த்தை, கண்ணன் பிறந்தபோதே உண்டு என்ற இப்பெரியாழ்வார் வார்த்தையும் நமக்கு ஸ்மாரகம்.
எம்பெருமானார் ஆறு வார்த்தை :
பிரஸ்தான திரியங்களை வாசித்து வாசிப்பிப்பது , மாட்டிற்றாகில்
ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்து வாசிப்பிப்பது , மாட்டிற்றாகில்
அருளிச்செயல்களை வாசித்து வாசிப்பிப்பது , மாட்டிற்றாகில்
ரஹஸ்ய திரியங்களை வாசித்து வாசிப்பிப்பது , மாட்டிற்றாகில்
இவை அறிந்த ஸ்ரீவைஷ்ணவனோடே சகவாசம் பண்ணுகை, மாட்டிற்றாகில்
திருநாராயண புரத்திலே ஒரு குடில் கட்டி நித்யவாஸம் செய்வது.
”அநந்யசாத்யா சாபீஷ்டா... ” என்ற பிரமாண வசனத்தின்படி சரணாகதிக்கு நம்பக்கல் இருக்க வேண்டிய ஆறும் உத்கிருஷ்ட உஜ்ஜீவனோபாயம் என்பதில் விசம்வாதம் உண்டோ? இல்லை.
௧. பரமனடி பாடுகை,
௨. (நோன்புக் கனுகுணமாக) நெய், பால் உண்ணாமை, மை தீட்டல், மலர் சூடுகை இவை தாமாக செய்து கொள்ளாமை,
௩. (மேலையார்) செயாதவைகளை தவிர்கை,
௪. தீகுறளை (பகவத், ஆசார்ய சன்னிதியில்) விண்ணப்பிக்காமை,
௫. ஐயம் (சாஸ்திர விஹித) தானங்களையும்,
௬. பிச்சை (ஆஸ்ரம விஹித) தானங்களையும்,
ஆம்தனையும் அநுஷ்டித்துப் போருகை, ஆண்டாள் நமக்கிட்ட கட்டளை களாகும்.
’அது, இது, வுது என்னலாது, ”உன்செய்கை” என்னை நைவிக்கும்’ என்கிறபடியே பகவானால், பகவானுக்காக, பவானை குறித்து சொல்லப்பட்ட இவை அனத்துமே நமக்கு உஜ்ஜீவன ஹேது.
கி. ஸ்ரீர.ஸ்ரீ.
No comments:
Post a Comment