பதினேழாம் பாட்டு - உறங்காமாலை :
உம்பியும் நீயும் உறங்கேல் எம்பாவாய்.
இதிலே சொல்லப் பட்ட ஸ்வாபதே சார்த்தம் ஆசாரியன், திருமந்திரம், திருமந்திரார்த்தம் மற்றும் மந்திர ஸாரம், முறையே நந்தகோபன், யசோதை, கிருஷ்ண, பலராமர் இவர்களைக் கொண்டு சூசிப்பிக்கப் படுகின்றன.
நந்தகோபன் என்கிற பதம் ஆனந்தம் அளிப்பவர், ஶ்ரீசூக்திகளை ஸம்ரக்ஷிபவர் என்கிற தத் விந்யாசத்தின்படி, ஆசாரியனைக் காட்டும்.
பர்தாவினுடைய படுக்கையும், ப்ரஜையையினுடைய தொட்டிலையும் விடாதே இருக்கும் யசோதை, பிரதம சரம பதங்களை விடாதே பற்றி இருக்கும் மத்யம பதம் (’உ’ காரம்) போலே அமைந்தது, இவர்கள் மூவரின் கிடக்கை
அம்பரம் ஊடறுத்தது ஓங்கி உலகளந்த வியாபாரம் வியாப்திக்கு விஷயமாகையாலே, நாராயண பதார்தமுமாக, திருமந்திரம்,
அடுத்ததான, கிருஷ்ண, பலராமர்களின் ஸ்நிக்த்த பாவம் திருமந்திர சாரத்தையும் உபன்யஸிக் கின்றன..
ஆசாரியன் அம்பரம், தண்ணீர், சோறு என்று அவர் செய்யும், தானம்-உபகாரம்தான், பரமபதம், விரஜை ஸ்நானம், மற்றும் அஹமன்னம், அஹமன்னம் என்கிற ஆத்ம ஸமர்பணத்துக்கான வழி.
மந்திர ஸாரமாவது, ’நின் திருவெட்டெழுத்தும் கற்று, உற்றதும் உன் அடியார்க்கடிமை’ என்கிறபடியே ததீயத்வத்தை ஸ்தாபிப்பது, பலராமனுக்குத் தம்பியாக பிறந்திருக்கிற படியாலே, அவதாரத்துக்குச் சேர சேஷத்வமும், அண்ணனானாலும் பலராமன் ஸ்வரூபத்துக்க்ச் சேர சேஷத்வம் பாராட்டி உணர்த்தி மறுக்கில் நாம் இழந்தே போம் அத்தனை.
ஆசார்ய ருசிபரிக்ரஹீதமான பகவத் பிரேமம், பகவத் ருசிபரிக்ரஹீதமான ஆசார்ய அபினிவேசம் இவைதானும், ஒன்றை மற்றொன்றிலே மூட்ட, ’பெரிய வண்குருகூர் நம்பிக்கு ஆள் உரியனாய் திரிதந்தாகிலும் தேவபிரானுடை கரிய கோல திருவுருக் காண்பன் நான்’ என்னக் கடவதிறே. ஆதிநாதன்-தேவபிரான் தன்ணளி பெறுகையும் இதுகொண்டு.
ஆழ்வாருக்கு ’நெடுமாற்கடிமை’ பதிகம் பாட, கீழில் ௮-பத்து வரை செல்ல வேண்டியிருந்தது. இவ்விடத்தில் ஒரு ஐதிஹ்யம் காட்டப் படுகிறது. ஸ்வந்திரனாய் இருந்து ஒருவன் மீண்டு பகவத் சேஷத்வத்துக்கு இசைந்தவனாய், பின் பாகவத சேஷத்வத்துக்கு வரக் காணில், பகவான்தானும் முகம் சுளிக்குமோ? என்று பட்டர் வினவ, ’அல்லிக் கமல கண்ணனாய்’ இருக்கும் என்று அவர் சிஷ்யர் நஞ்சீயர் பதில் அளித்தார் என்று காட்டப் பட்டுள்ளது. அதாவது ’ஈஸ்வர சேஷம்’ என்று அறிந்த வன்று பிரமித்து மிளலாம். ததீய சேஷத்வ பர்யந்தமாக உணர்ந்தால் மீள வேண்டாவிறே.
பதினெட்டாம் பாட்டு - வந்து திறவாய் மகிழ்ந்து - மகிழ் காலை :
நப்பிந்னை நங்காய் என்று ஸ்திரீத்வ பூர்த்தியும், புருஷகர பூர்த்தியும் உடையவள். எங்கனே என்னில், ஈஸ்வரனை அழகாலே திருத்துமவள், சேதனனை அருளாலே திருத்தும். கிருஷ்ணா வதாரத்திலே புருஷகார பூதை நப்பிந்னை பிராட்டியாதலால், திருவாகிறாள்.
கந்தம் கமழ் குழலி, செந்தாமரைக் கை, சீரார் வளை ஒலி என்று மூக்கு, கண், காது இவை பட்டினி போகாதே தளிர்க்கும்படி வந்து திறவாய் மகிழ்ந்து, என்பது ஆண்டாள் விண்ணப்பம். ஆசாரியனுக்கும் உபாய வைபவம் உண்டாகையால், அவனைக் காட்டுவதாகவும் தொன்யர்த்தால் விளங்கிக் கொள்ளலாம்.
பந்து - சிஷ்ய வர்கத்துக்கு உபலக்ஷணம். செந்தாமரைக் கை அவருடைய உபதேச முத்திரைக்கும், வளை ஒலிப்ப என்பது பாசுரங்களின் தொன்யர்த்த விளக்கங்களுக்குமாய், வந்து திறவாய் மகிழ்ந்து - திருமாளிகை கதவை திறந்து, வாயைத் திறந்து, பட்டினி கிடந்து அறிய வேண்டிய அர்த்தங்களை ’ஆசையுடையோர்கெல்லாம் ஆரியர்காள் கூறும்’ என்ற வகையிலே, ’கூடு மனமுடையீர்கள் வந்து கூடுமின்’ என்றிவைகளிலே சொன்ன மர்ம சிரத்தை உடைய அதிகாரிகளாகிய எங்களுக்கு, ’நனும் சொன்னேன், நமரும் உரைமின்’ என்று அத்தை ஸர்வாதிகர மாக்கி உபதேசிக்க வேண்டும். இத்தால் பயன் எமக்காய், மகிழ்சி உம்மதாக வேண்டும் என்கிறாள். இதுவே ஆண்டாள் காட்டிய ’மகிழ் மாலை’.
பத்தொன்பதாம் பாட்டு - தத்துவமன்று, தகவன்று ஏலோரெம் பாவாய் - தகவு மாலை :
மைத்தடங் கண்ணி - பக்தி சித்தாஞ்சனம் ஆகிற பகவத் விஷயத்தில் ஈடுபாடு.
நீ, உன் மணாளனை - ஈஸ்வராய நிவேதிதும் என்றும், நாரீணாம் உத்தமை என்றும் சிஷ்யனை ஈஸ்வர சேஷமாக்குகை.
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் - ஆத்மாக்கள் எல்லாம் அவனுக்கு மஹிஷி பிராயரே ஆயினும், ஆசாரியன் அபிமத மஹிஷியாகிறர். பிராட்டி பரிகரங்களாய் இருக்கிற நம்மை, தன்பரிகரமாக்கி முந்துர காரியம் செய்ய வேண்டி ஸ்வகதமாக தான் விழைபவன்.
தத்துவ மன்று - ”தது+த்வம்” அன்று. ’தத்வமஶி’ ஸ்வேதகேதோ! என்கிற வேத வாக்யத்துக்கு சொல்லப்பட்ட அத்வைத பரமான அர்த்தம் தவறு என்று காட்டி மீட்காவிடில்,
தகவன்று - உம்முடைய கிருபைக்குச் சேராது. இதுவே ’தகவு மலை’.
இருபதாம் பாட்டு - இப்போதே எம்மை நீராட்டு - நீராட்ட மாலை :
’இஹிபஸ்யதி ஶரீராணி’ என்று தண்டகாரண்ய ருஷிகள் ராமனிடம் காட்டியது போல, விரஹம் தின்ற தங்கள் உடம்பைக் காட்டி ’எம்மை நீராட்டு’ என்கிறார்கள்.
உன்மணாளனையும் தந்து - விசிரி, கண்ணாடி அத்தோடு உன்மணாளனையும் தர வேண்டும். ’எம்தமை விற்கவும் படுவார்களே’ என்கிற ரீதியில், அசேதன வஸ்துக் களுக்கீடாக எடுதாளும்படித் பகவானும் தன்னை ஆக்கி வைதிருக்கிற ஸௌலப்யம்.
இப்போதே எம்மை நீராட்டு - கைங்கர்யம் கொள்ளாமை அவனுக்கு தாபம் என்றால் அதை இழக்கை எமக்கு வெக்கை. ’க்ரீஷ்மே ஸீதமிவக்ருதம்’ என்கிறபடியும், ’த்வதீக்ஷண ஸுதாஶிந்து வீஶிவிக்ஷேப ஸீகரைஹி’ என்கிறபடியும் உன் திருக் கண்நோக்காகிற தீர்த்தம் கொண்டு நீராட்டு என்றபடி.
’ஒருபகல் ஓர் ஊழியாலோ’ என்று பேசினபடி பிரியில் தரியாமை யாகிற வாற்றாமை, விலகும்படியாக இப்போதே எம்மை நீராட்டு என்று த்வரிக்கிறார்கள்.

No comments:
Post a Comment